
சென்னையில் 15 பேருக்கு டெங்கு உறுதி - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
செய்தி முன்னோட்டம்
சமீபகாலமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் பேசியதாவது, சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசுக்களை அழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் நீடித்தால் மருந்தகங்களை நாடாமல் அரசு மருத்துவமனை சென்று மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவர், கட்டுமான பணியிடங்கள், காலி மனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற இடங்களில் நீர் தேங்காமல் கவனமாக கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சென்னையில் 15 பேருக்கு டெங்கு
சென்னையில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்!#DengueFever | #Dengue | #Radhakrishnan | #DinakaranNews pic.twitter.com/qkBGuSWhzu
— Dinakaran (@DinakaranNews) September 17, 2023