குருகிராமில் மீண்டும் கலவரம்: 14 கடைகள் சேதம், 7 கடைகளுக்கு தீ வைப்பு
செய்தி முன்னோட்டம்
ஹரியானாவின் நூஹ்வில் நேற்று இனக்கலவரம் நடந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 1) குருகிராமில் உள்ள பாட்ஷாபூரில் புதிய வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் SUVகளில் வந்த 200 பேர் கொண்ட கும்பல், பாட்ஷாபூரில் உள்ள முக்கிய சந்தையில் இருக்கும் பிரியாணி விற்பனை செய்யும் கடைகளை குறிவைத்து 14 கடைகளை சேதப்படுத்தின.
குருகிராமின் செக்டார் 66ல் ஏழு கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
நேற்று, குருகிராமின் செக்டர் 57ல் உள்ள ஒரு மசூதியில் சுமார் 45 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
பின்னர் அந்த கும்பல் மசூதிக்கு தீ வைத்தது.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் காயமடைந்ததாகவும் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
ஜிவ்ஞ்
ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய இனக்கலவரம்
இன்று பேட்டியளித்த குருகிராம் துணை ஆணையர் நிஷாந்த்-யாதவ், "சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. நூஹில் நேற்று என்ன நடந்தாலும் சோஹ்னாவில் சில ஸ்பில்-ஓவர் தாக்கம் இருந்தது, இருப்பினும், மாலைக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நூஹில் நேற்று நடந்த சம்பவங்களால் சோஹ்னாவில் சில பாதிப்புகள் இருந்தன. இருப்பினும், நேற்று மாலைக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது." என்று தெரிவித்திருந்தார்.
நேற்று குருகிராம் மற்றும் நூஹ் ஆகிய இடங்களுக்கு 144-தடை உத்தரவை பிறப்பித்த ஹரியானா அரசு, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் பல்வால் ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் எதுவும் செவ்வாய்கிழமை(இன்று) இயங்காது என்று அறிவித்தது.
நேற்று, ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) நடத்திய ஊர்வலத்தை ஒரு கும்பல் தடுக்க முயன்றதால், இந்த கலவரம் தொடங்கியது.