
ஹரியானா வன்முறைகளை அடுத்து 'முஸ்லீம்களைப் புறக்கணிக்க' 14 பஞ்சாயத்துகள் முடிவு
செய்தி முன்னோட்டம்
காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ள ஹரியானாவின் 14 கிராம பஞ்சாயத்துகள், "முஸ்லீம் சமூக உறுப்பினர்களைப் புறக்கணிக்க" இருப்பதாக தெரிவித்துள்ளன.
ஹரியானாவில் சமீபத்தில் நடந்த மத கலவரத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 31ஆம் தேதி ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) நடத்திய மத ஊர்வலத்தை ஒரு கும்பல் தடுக்க முயன்றதால், ஹரியானாவில் மத கலவரம் வெடித்தது.
காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ள 14 கிராமங்களும் மகேந்திரகர், ஜஜ்ஜார் மற்றும் ரேவாரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவைகளாகும்.
ஜூலை 31ஆம் தேதி ஆரம்பித்த மத கலவரத்தால் இந்த 3 மாவட்டங்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டது.
பிஹுவி
'முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீடுகள் கிடையாது': கிராம பஞ்சாயத்துகள்
ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் தொடங்கி பிற மாவட்டங்களுக்கும் பரவிய இந்த கலவரத்தால் 6 பேர் கொல்லப்பட்டனர். பொது சொத்துக்களுக்கும் தனியார் சொத்துக்களுக்கும் கணிசமான சேதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, ஹரியானாவை சேர்ந்த 14 கிராம பஞ்சாயத்துகள் "முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீடுகள் மற்றும் கடைகளை வாடகைக்கு விடக்கூடாது" என்று முடிவு செய்துள்ளன.
மேலும், தெருவோர வியாபாரிகளை கிராமங்களுக்குள் அனுமதிக்கும் முன், அவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறிய அவர்களது அடையாளச் சான்றுகளையும் கிராம மக்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஹரியானாவில், கடந்த காலங்களிலும் குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக இத்தகைய பிரகடனங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.