
கர்மவீரர் காமராசரின் 121வது பிறந்தநாள் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
செய்தி முன்னோட்டம்
விருதுநகர் மாவட்டம் 1903ம்ஆண்டு ஜூலை 15ம் தேதி குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாளுக்கு பிறந்தவர் தான் காமராசர்.
1954ம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்ற காமராசர், 9ஆண்டுகள் பதவியில் நீடித்தார்.
ஏழைக்குடும்பத்தினை சேர்ந்த குழந்தைகளும் படிக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதியஉணவு திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.
நேர்மை மற்றும் எளிமைக்கு இலக்கணமாக விலங்கிய இவர், கல்விக்கண் திறந்தவர், படிக்காதமேதை, தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர், கருப்பு காந்தி என்னும் பெயர்களால் மக்களால் புகழப்பட்டவர்.
காங்கிரஸ் கட்சியில் தனது 16வது வயதில் உறுப்பினராக இணைந்த இவர், டாக்டர் வரதராஜுலு நாயுடு என்பவர் மூலம் 1919ம் ஆண்டு முதல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.
கிராமங்கள் தோறும் பல துவக்கப்பள்ளிகளை திறந்துவைத்து கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியினை உருவாக்கினார்.
காமராஜர்
விவசாயம், தொழில் துறைகளில் மறுமலர்ச்சியினை கொண்டு வந்தவர்
விவசாயம்,தொழில் உள்ளிட்டத்துறைகளில் பெரும் வளர்ச்சியினை கொண்டுவர அயராது முயற்சிகளை மேற்கொண்ட காமராசர், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அணைகளை கட்டி விவசாயத்திற்கு பாசனவசதிகளை ஏற்படுத்தினார்.
முதல்வராக பதவியேற்றவுடனே துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார்.
பின்னர் உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் ஓய்வூதியம் வழங்க ஆணையிட்டார்.
இத்தனை சாதனைகளைப்புரிந்த இவர் அக்டோபர் 2-1975ம்ஆண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று(ஜூலை.,15)இவருடைய பிறந்தநாளினை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு காமராசரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் தனக்கு வழங்கப்பட்ட 7,740புத்தகங்களை அரசு பொதுநூலகத்திற்கு வழங்கினார்.
தொடர்ந்து, பொதுத்தேர்வுகளில் சிறப்பிடத்தினை பெற்ற மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகையினையும் வழங்கினார்.