NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு - அதிர்ச்சி தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு - அதிர்ச்சி தகவல்
    கடந்த ஒரு வாரத்தில் தமிழநாட்டில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு - அதிர்ச்சி தகவல்

    கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு - அதிர்ச்சி தகவல்

    எழுதியவர் Nivetha P
    Sep 14, 2023
    01:05 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை சார்பில் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

    இம்மாதம் துவங்கி 13 நாட்களில் தமிழகத்தில் 204 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது என்றும், சராசரியாக ஒருநாளைக்கு தமிழகத்தில் 15ல் இருந்து 20 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது என்றும் தமிழக மருத்துவத்துறை கூறியுள்ளது.

    மதுரையில், 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு கடந்த ஒருவாரத்தில் டெங்கு காய்ச்சல் இருப்பதாக கூறப்படுகிறது.

    அதனை தொடர்ந்து, புதுக்கோட்டையில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    டெங்கு பரவல் காரணமாக சுகாதாரப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.

    டெங்கு 

    புதுச்சேரியில் 2 பேர் டெங்குவால் உயிரிழப்பு 

    இதனிடையே, புதுச்சேரியில் 2 பேர் டெங்கு மற்றும் மலேரியா இறந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி அச்சத்தினை அதிகரித்துள்ளது.

    அதன்படி, புதுச்சேரி குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 17 வயது கல்லூரி மாணவியான காயத்ரி டெங்கு பாதிப்பால் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிரச்சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

    இந்நிலையில் அவர் நேற்று(செப்.,13)சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது.

    அவரைத்தொடர்ந்து, டைபாய்டு காரணமாக புதுச்சேரி மேட்டுப்பாளையத்தினை சேர்ந்த மீனரோஷினி(28)கடந்த 4ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அதன்பின்னர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று திடீரென உயிரிழந்ததாகவும், அவருக்கு டெங்கு பாதிப்பும் இருந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

    டெங்கு பாதிப்பால் தான் அவர் உயிரிழந்தார் என்று சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புதுச்சேரி
    டெங்கு காய்ச்சல்
    மருத்துவத்துறை

    சமீபத்திய

    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்

    புதுச்சேரி

    அடுத்த 7 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    நாளை 2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தமிழ்நாடு
    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு

    டெங்கு காய்ச்சல்

    தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! ஹெல்த் டிப்ஸ்
    டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது  இந்தியா
    டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை  சென்னை
    கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்  கேரளா

    மருத்துவத்துறை

    இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு  மத்திய அரசு
    தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    நெக்ஸ்ட் தேர்வு கைவிடப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்  மு.க ஸ்டாலின்
    MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு  பள்ளிக்கல்வித்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025