Page Loader
தமிழ்நாட்டில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார் முதல்வர்

தமிழ்நாட்டில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2025
12:12 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையில் நடைபெற்ற விழாவில் காணொளி வாயிலாக முதல்வர் இவற்றை திறந்து வைத்தார். முன்னதாக 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா உரையில், தமிழக முதல்வர் ஜெனரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் விதமாக 1,000 முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட மருந்தகங்கள் மற்றும் பணி நியமனங்கள்

சென்னையில் 33 இடங்கள், மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு திறக்கப்பட்ட மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வழங்குகிறது. தொழில் முனைவோருக்கு, மருந்தகம் தொடங்க உதவும் வகையில் 3 லட்சம் ரூபாய் வரை அரசின் மானியமாக வழங்கப்படுகிறது; இதில் 50% தொகை ரொக்கமாகவும், மற்ற 50% மருந்துகளாகவும் வழங்கப்படுகிறது. மருந்தகங்கள் தொடங்க, தமிழ்நாடு முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் விண்ணப்பிக்குமாறு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில், 500 மருந்தகங்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம், மற்ற 500 மருந்தகங்கள் தொழில் முனைவோரின் மூலம் திறக்கப்பட்டுள்ளன.