பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்
செய்தி முன்னோட்டம்
நேற்று மாலை அசாம் மாநிலத்தின் பாஜக தலைவரும் எம்பியுமான ராஜ்தீப் ராய் வீட்டில் 10 வயது சிறுவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அந்த சிறுவனின் பெயரும் ராஜ்தீப் ராய் தான் என்று கூறப்படுகிறது.
அந்த சிறுவனும், அவனது தாயும், மூத்த சகோதரியும் எம்பி வீட்டில் தான் பல மாதங்களாக வசித்து வருகின்றனர்.
இந்த தகவல் கிடைத்ததும் பாஜக எம்பி தனது வீட்டிற்கு விரைந்ததாக தெரிவித்துள்ளார்.
"சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எனக்கு தெரிய வந்ததும், நாங்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் சிறுவனின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். துரதிர்ஷ்டவசமாக, அவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது." என்று பாஜக எம்பி தெரிவித்துள்ளார்.
தக்கன
சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாஜக எம்.பி குற்றச்சாட்டு
"சிறுவனின் கழுத்து துணியால் சுற்றப்பட்டிருந்தது. சிறுவனின் குடும்பத்தினர் டோலை என்ற இடத்தை சேர்ந்தவர்கள். சிறுவனின் தாயார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக தலைவரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார்." என்று கச்சார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) சுப்ரதா சென் கூறியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சிறுவனின் மரணத்திற்கு தற்கொலை தான் காரணமாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சிறுவனின் தாயார் அவனுக்கு மொபைல் போன் வாங்கித் தர மறுத்ததால் அவன் மனமுடைந்த நிலையில் இருந்ததாக அவனது குடுமபத்தினர் கூறியுள்ளனர்.
எனினும், பாஜக எம்.பி சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மேலும், மாவட்டத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.