Page Loader
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு 10 மடங்கு மின்கட்டணம் வசூல் - சென்னை உயர்நீதிமன்றம்
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு 10 மடங்கு மின்கட்டணம் வசூல் - சென்னை உயர்நீதிமன்றம்

அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு 10 மடங்கு மின்கட்டணம் வசூல் - சென்னை உயர்நீதிமன்றம்

எழுதியவர் Nivetha P
Feb 02, 2023
10:06 pm

செய்தி முன்னோட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் நிலத்தை ஆக்கிரமைப்பு செய்து வீட்டை கட்டியுள்ளவர்களை காலி செய்யுமாறு ஆவடி தாசில்தார் நோட்டிஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வுக்கு முன் இன்று(பிப்.,2) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க ஆக்கிரமிப்பாளருக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஆவடி தாசில்தார்

ஆக்கிரமிப்பில் உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய அறிவுறுத்தல்

மேலும், கருத்து தெரிவித்த நீதிபதிகள் பத்து மடங்கு மின் கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாக மனு தாக்கல் செய்தால், வீட்டை காலி செய்ய பிறப்பித்த நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிப்பதாக மனுதாரர்களுக்கு நீதிபதிகள் தெரிவித்தனர். இது குறித்து மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து, பத்து மடங்கு மின்கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அந்த நிலப்பகுதி மட்டும் பட்டா நிலம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த நிலத்தை அளந்து ஆக்கிரமிப்பில் உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவினை ஆவடி தாசில்தாருக்கு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.