LOADING...
டிராகன் முதல் பைசன் வரை: 2025-ல் வசூலை வாரி வழங்கிய டாப் 5 தமிழ் படங்கள்
2025-ஆம் ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களே அதிக வசூலை பெற்றது

டிராகன் முதல் பைசன் வரை: 2025-ல் வசூலை வாரி வழங்கிய டாப் 5 தமிழ் படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 22, 2025
06:14 pm

செய்தி முன்னோட்டம்

2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான படங்களில், மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான சில படங்கள் முதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பெரிய படங்கள் வரை தயாரிப்பாளர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளன. பல நூறு படங்கள் இந்தாண்டு வெளியிருந்த போதும், ஒரு சில படங்களே தயாரிப்பாளர்களை லாபம் சம்பாதிக்க வைத்தது. இதில் சுவாரசியமாக டாப் நடிகர்கள் படம் இடம் பெறவில்லை. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களே அதிக வசூலை பெற்றது. அவை எவை?

#1

டூரிஸ்ட் பேமிலி

இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஹிட் இதுதான். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ஒரு ஃபீல்-குட் குடும்ப திரைப்படம். வெறும் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், சுமார் 90 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளது.

#2

டிராகன்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய 'டிராகன்', இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. 37 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த ஆக்சன்-ரொமாண்டிக் திரைப்படம், உலகளவில் 151 கோடி ரூபாய் வசூலித்து பிளாக்பஸ்டர் ஆனது. AGS நிறுவனத்தின் தயாரிப்பில் இது பிரதீப் ரங்கநாதனின் மூன்றாவது படைப்பாகும்.

Advertisement

#3

தலைவன் தலைவி

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம், நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளியானது. விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, நித்யா மேனன் நாயகியை நடித்திருந்த இந்த திரைப்படம் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது.

Advertisement

#4

பைசன் 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஒரு கபடி வீரராக நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'பைசன்', 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.

#5

மத கஜ ராஜா

நீண்ட நாட்களாக (சுமார் 12 ஆண்டுகள்) முடங்கிக் கிடந்த சுந்தர் சி-யின் இந்தப் படம், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி ஆச்சரியமான வெற்றியை பெற்றது. விஷால் நடித்த இந்தப் படம் 15 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில், 65 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

Advertisement