TOXIC: #யாஷ்19 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் வீடியோ வெளியானது
செய்தி முன்னோட்டம்
கேஜிஎஃப் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற கன்னட நடிகர் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. #யாஷ்19 திரைப்படத்திற்கு 'டாக்சிக்' என பெயரிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான டைட்டில் வீடியோவையும் பட குழு வெளியிட்டுள்ளது.
தமிழில் நள தமயந்தி திரைப்படத்தில் நடித்த, மலையாளத்தில் மூத்தோன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, கீத்து மோகன்தாஸ் இப்படத்தை இயக்குகிறார்.
கோவாவில் மாஃபியா கும்பல் தொடர்பான கதையாக, பேன் இந்தியா படமாக இப்படம் உருவாகிறது.
படத்தில் சாய் பல்லவி இணைந்துள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், மூன்று நாயகிகள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
டாக்சிக் படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் நிலையில், இசையமைப்பாளராக சரண்ராஜை புக் செய்ய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
டாக்சிக் என்ன பெயரிடப்பட்டுள்ள #யாஷ்19 திரைப்படம்
'What you seek is seeking you' - Rumi
— Yash (@TheNameIsYash) December 8, 2023
A Fairy Tale for Grown-ups
#TOXIChttps://t.co/0G03Qjb3zc@KvnProductions #GeetuMohandas