"என்னோட மாஸான சகோதரி நயன்தாரா!" டாக்ஸிக் டிரெய்லர் விழாவில் யஷ் நெகிழ்ச்சி; படம் ரிலீஸ் எப்போது?
செய்தி முன்னோட்டம்
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட நட்சத்திர நடிகர் யஷின் டாக்ஸிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் பெங்களூருவில் உள்ள ஏஎம்பி கபாலி திரையரங்கில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) மாலை வெளியிடப்பட்டது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் விழாவில் முன்னணி நடிகர் யஷ், நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் மற்றும் அக்ஷய் ஓபராய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். டிரெய்லர் வெளியீட்டிற்குப் பிறகு படத்தில் நடித்த தனது சக நடிகர்களை யஷ் மேடையில் புகழ்ந்து பேசினார்.
நயன்தாரா
நயன்தாரா மற்றும் கியாரா அத்வானியைப் பாராட்டிய யஷ்
விழாவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவைப் பற்றிப் பேசிய யஷ், "நீங்கள் காட்டிய அர்ப்பணிப்பும் உழைப்பும் மகத்தானது, ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் மாஸான மற்றும் தைரியமான சகோதரி நீங்கள்தான்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து கியாரா அத்வானியைப் பாராட்டிய அவர், படத்தின் கதை மற்றும் இயக்குநரின் தொலைநோக்குப் பார்வைக்குக் கியாரா முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து கடுமையாக உழைத்துள்ளதாகக் கூறினார்.
நடிகை தாரா சுதாரியாவின் நேர்த்தியான நடிப்பால் படத்தில் அவரது காட்சிகள் அதிகரிக்கப்பட்டதாகவும் யஷ் குறிப்பிட்டார்.
ருக்மணி வசந்த்
ஹுமா குரேஷி மற்றும் ருக்மணி வசந்தின் முக்கியக் பங்களிப்பு
படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியைப் பற்றிக் குறிப்பிட்ட யஷ், "ஹுமா இந்தத் திரைப்படத்தின் பிராண்ட் அம்பாசிடராகவே மாறிவிட்டார், திரையில் அவரது நடிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும்" என்றார்.
மேலும், கர்நாடகாவை சேர்ந்த ருக்மணி வசந்த் மற்றும் சுதேவ் நாயர் ஆகியோரின் பங்கை நினைவு கூர்ந்த யஷ், சுதேவ் நாயரின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தத் திரைப்படம் சாத்தியமாகியிருக்காது என நெகிழ்ந்தார்.
அத்துடன் தனக்குத் தொடர்ந்து தூணாக நின்று ஆதரவளித்து வரும் தனது மனைவிக்கும் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
ஆகஸ்ட் 26 ரிலீஸ்
ஆகஸ்ட் 26 அன்று உலகளவில் திரையரங்குகளில் ரிலீஸ்
கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் நேரடித் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொாழிமாற்றம் செய்யப்பட்டு வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
யஷின் முந்தைய கேஜிஎஃப் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் வெளியாகும் இத்திரைப்படம் பான் இந்தியா அளவில் மீண்டும் ஒரு புதிய வசூல் சாதனையைப் படைக்கும் எனத் திரைத்துறையினர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.