Page Loader
'டாக்ஸிக்' படத்தில் '70களின் கதைக்களத்தில் நடிக்கும் யாஷ், நயன்தாரா

'டாக்ஸிக்' படத்தில் '70களின் கதைக்களத்தில் நடிக்கும் யாஷ், நயன்தாரா

எழுதியவர் Venkatalakshmi V
Jul 01, 2024
06:09 pm

செய்தி முன்னோட்டம்

கன்னட நடிகர் யாஷ் முதன்முறையாக நயன்தாராவுடன் நடிக்கும் திரைப்படமான 'டாக்ஸிக்' ஒரு ரெட்ரோ பீரியட் படமாக இருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படத்தில், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் 1950கள் மற்றும் 1970களுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தின் கதைக்களத்தை கொண்டுள்ளது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் மாஃபியா பின்னணியில் ஆக்‌ஷன் சார்ந்த கதையாக இப்படம் உருவாகி வருகிறது. கீது மோகன்தாஸ் இயக்கும் இந்த திரைப்படம், டிசம்பர் 2023இல் அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில், கரீனா கபூர் கான் தான் நடிப்பதாக இருந்தது. இது அவரது தென்னிந்திய முதல் படமாக இருந்திருக்கும். இருப்பினும், அவர் விலகியதாகவும், அவருக்கு பதிலாக நயன்தாரா இணைந்ததாகவும் கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

டைம் ட்ராவல் செய்யப்போகும் யாஷ், நயன்தாரா