Page Loader
இராவணன் வேடத்திற்கு நோ சொன்ன 'ராக்கி பாய்' யாஷ்
பாலிவுட்டில் உருவாகப்போகும் மற்றுமொரு ராமாயண காவியத்தில், ராவணன் கதாபாத்திரத்தில் யாஷ் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இராவணன் வேடத்திற்கு நோ சொன்ன 'ராக்கி பாய்' யாஷ்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 12, 2023
12:36 pm

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக இந்திய சினிமாவில், வரலாற்று படங்களும், இதிகாச படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவை அனைத்தும், பன்மொழி ரசிகர்களையும் கவரும் வண்ணம், பான்-இந்தியா படங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலிவுட்டில், ராமாயணத்தை படமாக்கவுள்ளனர். அதில், பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர், ராமன் வேடத்திலும், அவரது மனைவியும், நடிகையுமான அலியா பட், சீதா வேடத்திலும் நடிக்க போவதாக கூறப்பட்டது. இராவணன் வேடத்தில், KGF நாயகன் யாஷ் நடிக்கப்போவதாக பலரும் கூறிவந்த நிலையில், அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டார் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம், அவரின் ரசிகர்களும், நலம் விரும்பிகளும், அவரை வில்லன் வேடத்தில் நடிக்கக்கூடாது என தடுத்துவிட்டார்களாம். அவர்களின் மனம் நோகக்கூடாதென்று, யாஷும் அந்த படவாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறுகிறார்கள்.

ட்விட்டர் அஞ்சல்

ராவணனாக யாஷ் நடிக்க போவதாக தகவல்