
10 படங்களுக்குள் கங்கனா ரணாவத்திற்கு தேசிய விருது - நடிகை ஜெயசுதா ஆதங்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகை ஜெயசுதா. 30க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.
தற்போது இவர் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து உள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் 5 நந்தி விருதுகளையும், 5 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகளில் பணியாற்றி உள்ளார்.
நந்தமூரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் 'Unstoppable' எனும் ஒரு டாக் ஷோவில் இவர் சமீபத்தில் பங்கேற்றுள்ளார்.
அதில் தென்னிந்திய படக் கலைஞர்களுக்கு மத்திய அரசு சரியான அங்கீகாரம் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஜெயசுதா பேட்டி
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தை பற்றி பேசியுள்ள ஜெயசுதா
இது குறித்து தொடர்ந்து பேசிய ஜெயசுதா அவர்கள் கூறியதாவது, கடந்த ஆண்டு ஜனாதிபதியிடம் இருந்து கங்கனா ரணாவத்திற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது.
"எனக்கு அது பரவாயில்லை ஏனெனில் அவர் அற்புதமான நடிகை. ஆனால் 10 படங்களுக்குள் இந்த விருதை கங்கனா ரணாவத் வாங்கியுள்ளார். என்னை போல் நிறைய நடிகர்கள் ஏராளமான படங்களில் நடித்து அரசால் அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
உலகிலேயே அதிகமான படங்களை இயக்கி கின்னஸ் சாதனை பெற்ற பெண் இயக்குனர் விஜய நிர்மலாக்கு கூட இந்த மாதிரியான பாராட்டுக்கள் கிடைக்க பெறவில்லை.
தென்னிந்திய நடிகைகளை மத்திய அரசு பாராட்டப்பட்டு அங்கீகரிக்காமல் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.