Page Loader
தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்களா?
நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷின் புகைப்படம்

தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்களா?

எழுதியவர் Saranya Shankar
Jan 05, 2023
06:11 pm

செய்தி முன்னோட்டம்

பா பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரபல நடிகர் தனுஷ். இப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவருடன் ரேவதி, மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் நடித்து இருந்தனர். மேலும் ராஜ்கிரண் இளமை வயது கதாபாத்திரத்தின் தனுஷ் நடித்து இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதன் பிறகு தனுஷ் தனது இரண்டாவது படமாக நான் ருத்ரன் படத்தை அறிவித்து இருந்தார். இப்படத்தில் நாகர்ஜுனா மற்றும் அதிதி நடிப்பதாக இருந்தது. இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு நடைபெற்றன. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.

விஷ்ணு விஷால்

முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால்?

தற்போது அவர் மீண்டும் இயக்குனராக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் இயக்கவிருக்கும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எஸ்.ஜே.சூர்யாவிடம் ஒரு முக்கியமான பாத்திரத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறிவருகின்றன. இந்த படத்தினை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது தனுஷ் நடித்து கொண்டு இருக்கும் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த வருடம் தொடங்கும் என கூறப்படுகின்றது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.