Page Loader
ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன்  நடிக்கிறாரா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா?

ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா?

எழுதியவர் Saranya Shankar
Jan 03, 2023
03:50 pm

செய்தி முன்னோட்டம்

தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனராக திகழ்பவர் எஸ்.எஸ். ராஜமௌலி ஆவார். பாகுபலி, பாகுபலி 2, RRR போன்ற பிரம்மாண்ட படங்களை திரையுலகிற்கு கொடுத்தவர். சர்வதேச அளவில் இவர் படங்கள் டப்பிங் செய்யப்பட்டு திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. தற்போது இவர் இயக்கிய RRR படத்தின் நாட்டு கூத்து பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் நான்கு பாகங்கள் வரை எடுக்க வாய்ப்பு இருப்பதாக ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்த படம் சூப்பர் ஹீரோ கதையம்சத்தை கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜமௌலி - கமல்ஹாசன்

ராஜமௌலியும் கமல்ஹாசனும் சந்தித்து பேசியதாக தகவல்

இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி அவர்கள் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ராஜமௌலியும் கமல்ஹாசனும் சமீபத்தில் சந்தித்தனர். அதில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதை பற்றி கலந்து ஆலோசனை நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை பற்றி இரு தரப்பிலும் எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்ததாக மணிரத்னம் மற்றும் பா. ரஞ்சித் இயக்கும் படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.