சீமான் வழக்கு - 11 ஆண்டுகள் நிலுவையில் வைத்தது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு புகாரளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த வழக்கினை ரத்து செய்யவேண்டும் என்று கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதுகுறித்த விசாரணை இன்று(செப்.,20)நீதிபதி வெங்கடேஷ் ஆனந்த் முன்னிலையில் வந்தது. அப்போது சீமான் மீதான வழக்கினை 11 ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்த காரணம் என்ன?என்று காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், விஜயலட்சுமி அளித்த புகார்கள், அதனை வாபஸ் பெற்ற விவரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார். அதேபோல் சீமான் தரப்பிலான ஆவணங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.