தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர்களை தேர்வு செய்யும் தமிழ் பட நடிகர்கள்: ஓர் பார்வை
சமீபகாலமாக கோலிவுட்டில் தற்போது ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகி வருகிறது. முன்னணி திரைப்பட நடிகர்கள் பலரும், தெலுங்கு திரையுலக இயக்குனர்களை தேர்வு செய்கிறார்கள். 'தளபதி' விஜய் தொடங்கி, சிவகார்த்திகேயன் வரை பலரும் தெலுங்கு இயக்குனர்கள் பக்கம் தாவி விட்டனர். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, தமிழ், தெலுங்கு என இரு மொழி ரசிகர்களையும் கவருவது தான் முக்கிய நோக்கம். அப்படி தெலுங்கு பட இயக்குனர்களை தேர்வு செய்த நடிகர்கள் பட்டியல் இதோ: கார்த்தி:'தோழா' என்ற படத்தின் இயக்குனர், வம்சி பைடிப்பள்ளி. இந்த படத்தின் மூலம், தெலுங்கில் நேரடியாக அறிமுகமானார் கார்த்தி. நாகர்ஜூனாவுடன் நடித்ததும் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பை தந்தது எனலாம்.
வாரிசு முதல் வாத்தி வரை, தமிழ் சினிமாவிற்கு இறக்குமதியான தெலுங்கு இயக்குனர்கள்
விஜய்: கார்த்தி தந்த வெற்றி, விஜய்க்கு தைரியத்தை தந்தது எனலாம். அதே வம்சி-ஐ தனது சமீபத்திய வெளியீடான 'வாரிசு' படத்திற்கு தேர்வு செய்தார். 'பீஸ்ட்' படத்திற்கு பிறகு ஒரு வெற்றி தந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த விஜய், வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தை தந்தார். படம், தமிழ், தெலுங்கு என இருமொழி ரசிகர்களும் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்டது. தனுஷ்: இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'வாத்தி'. வெங்கி ஆட்லூரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதை தொடர்ந்து, சேகர் கம்முலா என்ற இயக்குனருடன் கை கோர்க்கிறார் தனுஷ். சிவகார்த்திகேயன்: 'பிரின்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம், அனுதீப் என்ற தெலுங்கு இயக்குனருடன் இணைந்தார் சிவா.