Thalaivar 173 படத்திலிருந்து சுந்தர் சி விலகல்: ரஜினிகாந்தின் அடுத்த இயக்குநராக யார் வருவார்?
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படமான 'தலைவர் 173'-ஐ, இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக நேற்று அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஒரே வாரத்தில் எடுக்கப்பட்ட இந்த திடீர் முடிவு காரணம் என்னவாக இருக்கும் கோடம்பாக்க வட்டாரங்கள் பரபரப்பான யூகங்களை வெளியிட்டு வரும் அதே நேரத்தில், இந்த படத்தின் அடுத்த கட்ட நகர்வு என்ன எனவும் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். அடுத்ததாக ரஜினியை இயக்கப்போவது யார் என பலரும் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
காரணம்
சுந்தர் சி விலகலுக்கான காரணம்
'தலைவர் 173' படத்தின் கதையிலும், திரைக்கதையிலும் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே சுந்தர் சி இந்தத் திட்டத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. இன்னொரு தகவலின் படி, சுந்தர் சி கூறிய ஒரு வரி கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், முழு கதை கூறியபின் அவர் அதில் கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் மேலும் வேண்டும் என கேட்டதாகவும், அதற்கு சுந்தர் சி ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர்
அடுத்த இயக்குநர் யார்?
1. வெற்றிமாறன்: சமூக அக்கறையுடன் கூடிய சிறந்த படங்களைக் கொடுக்கும் இவர், ரஜினிகாந்துடன் இணைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. 2. கார்த்திக் சுப்பராஜ்: 'பேட்ட' படத்தின் மூலம் ரஜினிகாந்த்துக்கு ஒரு பெரிய வெற்றியை அளித்த இவரும் மீண்டும் பரிசீலனையில் உள்ளார். 3. வெங்கட் பிரபு: இவர் முன்னரே ரஜினி மற்றும் கமலை வைத்து இயக்க ஒரு திட்டம் இருப்பதாக தெரிவித்திருந்தார். மாஸ் எலிமெண்ட்ஸ் சேர்த்து ஜனரஞ்சக படம் எடுப்பதில் VP திறமையாளர். 4: சி.பிரேம்குமார்: 96, மெய்யழகன் போன்ற மெல்லிய உணர்வுகளடங்கிய மனதை தொடும் படங்கள் எடுத்த பிரேம்குமாரும் சாத்தியமான இயக்குனர்கள் பட்டியலில் உள்ளார். இவர்களில் யாரேனும் ஒருவர் 'தலைவர் 173' படத்தைக் கைக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.