அடுத்த செய்திக் கட்டுரை
யார் இந்த மாதுளி? வைரலாகும் பொன்னியின் செல்வனின் அறிமுகக் கதாபாத்திரம்
எழுதியவர்
Siranjeevi
May 03, 2023
10:50 am
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில், மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான படம் தான் பொன்னியின் செல்வன் 2.
பொன்னியின் செல்வன் 1 பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படம் இதுவரை 200 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.
இந்நிலையில், படத்தில் மதுராந்தனாக நடித்திருந்த ரகுமானின் இணையாக ராஷ்டிரகூட மன்னனின் மகள் மாதுளி என ஒரு பெண்ணை அறிமுகம் செய்தனர்.
மாதுளியாக நடித்த அப்பெண் யார் என ரசிகர்கள் தேட தொடங்கினர். அவர் பெங்களூருவை சேர்ந்த நடன கலைஞரான ஸ்ரீமா உபாத்யாயா தான்.
பொன்னியின் செல்வன் தான் முதல் படம். இவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் தற்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது.