Page Loader
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் "கேஜிஎஃப் 3" படத்தின் படப்பிடிப்பு எப்போது? 

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் "கேஜிஎஃப் 3" படத்தின் படப்பிடிப்பு எப்போது? 

எழுதியவர் Arul Jothe
May 23, 2023
01:35 pm

செய்தி முன்னோட்டம்

தென் இந்தியா சினிமாவின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வெற்றி பெற்ற பிளாக் பஸ்டர் திரைப்படம் தான் 'கேஜிஎஃப்'. முதல் பாகம் அமோக வெற்றியை கொடுத்தாலும் இரண்டாவது பாகம் அதை விட அதிக வரவேற்பையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு அளித்தது. இரண்டாம் பாகத்தில் பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்து படத்தின் சுவாரசியத்தை மேலும் அதிகப்படுத்தினார். இதன் 3-ம் பாகம் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அதற்கான தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பிரசாந்த் நீல் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார்.

KGF

 'கேஜிஎஃப் 3' படத்தின் படப்பிடிப்பு 

பிரசாந்த் நீல் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் என பலரும் நடிக்கின்றனர். இதற்கு பிறகு ஜூனியர் என்டிஆரோடு பிரசாந்த் நீல் இணைகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ திரைப்பட அறிவிப்பு வெளியான பிறகும் கூட 'கேஜிஎஃப் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்ட வண்ணம் உள்ளனர். ஜூனியர் என்டிஆரோடு ஒப்பந்தம் ஆன படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரே யாஷ் நடிக்கவிருக்கும் 'கேஜிஎஃப் 3' படத்தின் படப்பிடிப்பு 2024 மார்ச் மாதத்திற்கு பிறகு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிது கால தாமதம் ஆனாலும், இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.