'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் பாடகராகும் நடிகர் சூர்யா
செய்தி முன்னோட்டம்
சூர்யாவின் வரவிருக்கும் படமான ' விஸ்வநாத் & சன்ஸ்' வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கும் சற்று அதிகமான காலமே உள்ள நிலையில், அப்படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் சூர்யா பாடுவார் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அறிவித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த இரண்டாவது சிங்கிள், நடிகர்- இயக்குனர் கென் கருணாஸ் எழுதியது எனவும் GV தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான முதல் பாடலான ' பட்டம்பூச்சி', தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. மமிதா பைஜுவின் நடனத்துடன், அருண்ராஜா காமராஜின் பாடல் வரிகளில், சுப்லாஷினி பாடியது இப்பாடல்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
THE ONE @Suriya_offl sir sings a dance number for #vishwanathandsons …. Written by @KenKarunaas ….. A #Venkyatluri film … @SitharaEnts @vamsi84 …. ❤️❤️❤️😍😍😍 pic.twitter.com/jf7yTKZRI0
— G.V.Prakash Kumar (@gvprakash) June 29, 2026
நடிகர்கள் விவரங்கள்
துணை நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விவரங்கள்
சூர்யா மற்றும் மமிதா பைஜு தவிர, விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், நாசர், சுதா, ரகுபாபு, சுனில் ரெட்டி, பவானி ஸ்ரீ, விவா ஹர்ஷா, காளி வெங்கட் மற்றும் ஜார்ஜ் மரியன் ஆகியோரும் நடித்துள்ளனர். வெங்கீ அட்லூரி இயக்கிய ' விஸ்வநாத் & சன்ஸ்' , ஒரு நடுத்தர வயது ஆணுக்கும் அவரை விட பாதி வயதுடைய பெண்ணுக்கும் இடையிலான காதல் கதையை விவரிக்கிறது. இப்படத்தை முறையே சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகியவற்றின் கீழ் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். இதை ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.