LOADING...
#விஷால்34 திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் ஷாட் டீசர் வெளியானது

#விஷால்34 திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் ஷாட் டீசர் வெளியானது

எழுதியவர் Srinath r
Dec 01, 2023
05:38 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஹரி மூன்றாவது முறையாக இணையும் #விஷால்34 திரைப்படத்திற்கு, ரத்னம் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் ஷார்ட் டீசர் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் போகும் அந்த வீடியோவில், விஷால் ஒருவரின் தலையை வெட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்(டிஎஸ்பி) படத்திற்கு இசையமைக்கிறார். விஷால் மற்றும் டிஎஸ்பி இணைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது. ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம், அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ரத்னம் படத்தின் ஃபர்ஸ்ட் ஷாட் டீசர் வெளியானது