Page Loader
நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினர்களுக்கு ஆதரவான நடவடிக்கை மேற்கொண்ட விஷால்
நடிகர் விஷால், நடிகர் சங்கத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு ஆதரவாக, சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினர்களுக்கு ஆதரவான நடவடிக்கை மேற்கொண்ட விஷால்

எழுதியவர் Srinath r
Nov 07, 2023
04:43 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் நடிகர் சங்கத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஆதரவான சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். விஷாலின் இந்த நடவடிக்கைகள், சமீபத்தில் உயிரிழந்த ஈட்டி கோவிந்தனின் மறைவுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 28 ஆம் தேதி அன்று தனது 78வது வயதில் துணை நடிகர் ஈட்டி கோவிந்தன் மருத்துவமனையில் உயிரிழந்தார். திருமணமாகாத அவருக்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ள குடும்பத்தினர் யாரும் இல்லாததால், அவரது இறுதிச் சடங்கை நடிகர் சங்கத்தின் செலவில், வடபழனி ஏவிஎம் மயானத்தில் விஷால் முன்னென்று நடத்தினார்.

2nd card

ஆதரவற்ற உறுப்பினர்களின் தகவல்களை சேகரிக்க விஷால் அறிவுறுத்தல்

ஈட்டி கோவிந்தனின் நிலைமை இனி வேறொரு வரக்கூடாது என்பதற்காக, விஷால் முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். கோவிந்தனின் மறைவுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து வருத்தம் தெரிவித்த விஷால், ஆதரவற்ற உறுப்பினர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்க தனது குழுவிற்கு அறிவுறுத்தினார். நடிகர் சங்கத்தின் சார்பாக, இந்த நபர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவை விரைவாக ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவத்தை விஷால் வலியுறுத்தினார். விஷாலின் இந்த நடவடிக்கைகள் தென்னிந்திய கலைஞர்கள் சங்கத்தில் உள்ள, மூத்த உறுப்பினர்களின் அவலநிலையைப் போக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், அவர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற உதவியற்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளாததை இது உறுதிப்படுத்துகிறது.