Page Loader
எல்லாமுமாக இருப்பவளே.. காதல் மனைவிக்கு க்யூட்டான பிறந்தநாள் வாழ்த்து கூறிய கோலி!
மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய விராட் கோலி

எல்லாமுமாக இருப்பவளே.. காதல் மனைவிக்கு க்யூட்டான பிறந்தநாள் வாழ்த்து கூறிய கோலி!

எழுதியவர் Siranjeevi
May 01, 2023
03:34 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மாவும், விராட் கோலியும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டில் திருமண செய்துகொண்டனர். இவர்களுக்கு, 2021ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டினார்கள். இந்நிலையில், 35-வது பிறந்த நாளை கொண்டாடும் அனுஷ்கா சர்மாவுக்கு, விராட் கோலி க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து, "நீ செல்லமாக கோபம் கொள்ளும் நாட்கள் உள்பட எல்லா நாட்களிலும் உன்னை நேசிக்கிறேன். எனக்கு எல்லாமுமாக இருப்பவளுக்கு இன்று பிறந்தநாள் என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Instagram அஞ்சல்

Instagram Post