Page Loader
நானும் விராட்கோலி ரசிகை - ஆர்சிபியை புகழ்ந்த ரஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோ
நான் விராட்கோலியின் தீவிர ரசிகை - ராஷ்மிகா மந்தனா

நானும் விராட்கோலி ரசிகை - ஆர்சிபியை புகழ்ந்த ரஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோ

எழுதியவர் Siranjeevi
May 01, 2023
03:40 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மற்றும் ஐபிஎல் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனுமான விராட்கோலி நடிகை ரஷ்மிகா மந்தனா தனக்கு பிடித்தமான வீரர் என புகழந்துள்ளார். பல பிரபலங்களுக்கும் வேறு துறைகளைச் சேர்ந்தவ பிரபலங்களை, தனது துறையில் நட்சத்திரமாக திகழ்பவர்களை மிகவும் பிடிக்கும். குறிப்பாக, கிரிக்கெட் வீரர்களுக்கு என்ற பிடித்தமான நடிகர் நடிகைகள் உள்ளனர். அதே போல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் இருகின்றார்கள். சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வீடியோ பைட்ஸ் ஒன்றில் தெரிவிக்கையில், தனக்கு பிடித்த வீரர் விராட்கோலி எனவும் பிடித்த அணி பெங்களூர் அணி என்றும் கூறியுள்ளார். ரஷ்மிகா மந்தனா ஆர்சிபி அணியின் ரசிகை என்பது ஆர்சிபி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post