NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம்
    பொழுதுபோக்கு

    ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம்

    ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம்
    எழுதியவர் Saranya Shankar
    Jan 07, 2023, 05:16 pm 1 நிமிட வாசிப்பு
    ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம்
    விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் காட்சி

    விக்ரம் அடுத்ததாக நடித்துக் கொண்டிருக்கும் படம் 'தங்கலான்.' இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரமுடன் மாளவிகா மேனன், பார்வதி மேனன், பசுபதி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் மற்றும் ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோலார் தங்க வயலில் வேலை செய்த தமிழர்களின் அவலத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி கொண்டு இருக்கிறது. எனவே இந்த படத்தின் பெரும்பகுதியின் படப்பிடிப்பு கோலார் தங்க வயல் பகுதியை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளது.

    விக்ரம் கேரியரில் இது ஒரு முக்கிய படமாக இருக்கும் - பா. ரஞ்சித்

    இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தங்கலான் வார்த்தையின் அர்த்தத்தை ரசிகர்கள் கூகுளில் தேட தொடங்கியுள்ளனர். தங்கலான் என்றால் ஊர் காவலன் என்பது பொருளாகும். இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். பொதுவாகவே விக்ரம் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடலை வருத்தி நடிப்பவர் என்ற பாராட்டுக்கு உரியவர். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரான பா.ரஞ்சித் அளித்துள்ள பேட்டியில் தங்கலான் படத்துக்காக விக்ரமிற்கு மேக்கப் போடுவதற்கு தினமும் 4 மணி நேரங்கள் எடுத்து கொள்ளப்படுகிறது என கூறியுள்ளார். மேலும் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி உணர்வுப் பூர்வமாக நடித்து வருகிறார். இது விக்ரம் கேரியரில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    பா ரஞ்சித்
    விக்ரம்
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை பள்ளி மாணவர்கள்
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் : ஐபிஎல்லின் டான் யார்? ஐபிஎல்

    பா ரஞ்சித்

    ப.ரஞ்சித்-விக்ரமின் தங்கலானில் இணையும் ஆங்கில நடிகர் டேனியல் கால்டாகிரோன் விக்ரம்
    'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன் கமல்ஹாசன்
    சிறிய பட்ஜெட் படங்களை விற்பதில் ஓடிடி-யிலும் பிரச்னை: பா. ரஞ்சித் வருத்தம் ஓடிடி
    வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு தமிழ்நாடு

    விக்ரம்

    சாமி படத்தின் வில்லன் மரணமா? வெளியான வீடியோ! வைரல் செய்தி
    'பிதாமகன்' படத்திற்காக பாலா, விக்ரம், சூர்யா பெற்ற சம்பள விவரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் விஏ துரை கோலிவுட்
    துருவ நட்சத்திரம் மே மாதத்தில் வெளிவரும் என தகவல் திரைப்பட அறிவிப்பு
    'NTR 30' படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு வில்லன் ஆகிறாரா சியான் விக்ரம்? கோலிவுட்

    தமிழ் திரைப்படம்

    கார்த்தி-நலன் குமாரசாமி படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் துவக்கம் தொடங்கியது கார்த்தி
    பொன்னியின் செல்வன்-2 படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு சிறப்பு விருந்தினராக கமல் பங்கேற்கிறார்! பாடல் வெளியீடு
    சிறுத்தை படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி வளந்துட்டாங்க? வைரல் ஆகும் புகைப்படங்கள் ட்ரெண்டிங் வீடியோ
    மற்றுமொரு முக்கோண காதல் கதையா? லைக்காவின் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம் திரைப்பட அறிவிப்பு

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023