NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் விக்ரம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் விக்ரம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
    தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம்

    தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் விக்ரம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2024
    03:39 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் விக்ரம் தற்போது தனது சமீபத்திய வெளியீடான தங்கலான் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    வெள்ளியன்று (ஆகஸ்ட் 16) ஹைதராபாத்தில் நடந்த தங்கலானுக்கான விளம்பர நிகழ்ச்சியின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    பா ரஞ்சித் இயக்கத்தில், 1800களில் கோலார் தங்க வயலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த பீரியட் ஆக்ஷன் டிராமா சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று திரையரங்குகளில் வெளியானது.

    பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் டேனியல் கால்டாகிரோன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்சன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

    இரண்டாம் பாகம்

    இரண்டாம் பாகம் குறித்து விக்ரம் விளக்கம்

    ஹைதராபாத்தில் நடந்த விளம்பர நிகழ்வின் போது பேசிய ​​விக்ரம், "ஞானவேல்ராஜா (தயாரிப்பாளர்), ரஞ்சித் மற்றும் நானும் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுக்க விரும்புவது குறித்து விவாதித்தோம்." என்றார்.

    மேலும், "நாங்கள் படத்தை விரும்பி 100 பாகங்களை உருவாக்க விரும்புவதால் மட்டுமல்ல, நீங்கள் அனைவரும் எங்களுக்குத் தந்த அன்பு. இந்தப் படத்தை நீங்கள் விரும்பும் விதம், ஆதரவு, இந்த கதையைத் தொடர வேண்டும் என்று நாங்கள் உணர்கிறோம்." என்று தெரிவித்தார்.

    கோலார் தங்க வயல்களில் தங்கத்தை கண்டுபிடிக்க ஒரு பிரிட்டிஷ் அதிகாரியால் நியமிக்கப்பட்ட பழங்குடியினரின் குழுவை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. விக்ரமுடன் ரஞ்சித் இணைந்துள்ள முதல் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கலான்
    விக்ரம்
    சினிமா
    கோலிவுட்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    தங்கலான்

    தங்கலான் திரைப்படத்தில் மாளவிகாவின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு  பா ரஞ்சித்
    நடிகர் விக்ரம் நடிக்கும் 'சியான் 62' திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது  விக்ரம்
    தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித் விக்ரம்
    சீயான் விக்ரம் பர்த்டே ஸ்பெஷல்: தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியீடு விக்ரம்

    விக்ரம்

    துருவநட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாடல், 'His Name is John' வெளியானது கௌதம் வாசுதேவ் மேனன்
    இணையத்தில் வெளியான தங்கலான் படத்தில் நடிகர் விக்ரமின் புது க்ளிக்  பா ரஞ்சித்
    'புஷ்பா 2 ' திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு  நடிகர்
    விக்ரம் vs ஜெயிலர் - இரண்டு படங்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் ஓர் பார்வை ரஜினிகாந்த்

    சினிமா

    "இன்ஸ்பெக்டர் முதல் ஐபிஎஸ் வரை"- போலீசாக விஜயகாந்த் கலக்கிய கதாபாத்திரங்கள் விஜயகாந்த்
    ராஷ்மிகா மந்தனாவின் 7 ஆண்டுகள் சினிமா பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய நான்கு முக்கிய படங்கள் திரைப்படம்
    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு ரஜினிகாந்த்
    இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு லோகேஷ் கனகராஜ்

    கோலிவுட்

    கவினை ஹீரோவாக வைத்து கலகலப்பு 3 உருவாக்க திட்டமிடும் சுந்தர்.சி திரைப்பட துவக்கம்
    இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் கேசவன் காலமானார் இயக்குனர்
    மார்ச் மாதம் நடிகை தாப்ஸிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் திருமணம்
    பழம்பெரும் நடிகர் 'அடடே' மனோகர் வயது மூப்பினால் காலமானார் நடிகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025