
விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜய்யின் அனைத்து பொது விழாக்களையும் முன்னின்று ஒருங்கிணைப்பவர் புஸ்ஸி ஆனந்த்.
இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற 'லியோ' பட வெற்றிவிழா நிகழ்ச்சிக்கும், அவர் ரசிகர்மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்து விழாவில் பங்குபெற செய்தார்.
லியோ விழா முடிவடைந்த நாளிலிருந்து சோர்வாக காணப்பட்டுள்ளார் புஸ்ஸி ஆனந்த்.
இதன் காரணமாக நேற்று இரவு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு, நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் வந்து அவரை நலம் விசாரித்தார். தற்போது புஸ்ஸி ஆனந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
ட்விட்டர் அஞ்சல்
புஸ்ஸி ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
புஸ்ஸி ஆனந்த்-க்கு திடீர் உடல் நலக்குறைவு
— Thanthi TV (@ThanthiTV) November 2, 2023
தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர்
புஸி ஆனந்த்-க்கு திடீர் உடல் நலக்குறைவு
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு
நேரில் சென்று நலம் விசாரித்த நடிகர் விஜய்#bussyanand | #vijay | #Chennai pic.twitter.com/PUjpR0MrxP