
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திடீர் திருமணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று வசி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
நெருங்கிய சுற்றத்தினர் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமண நிகழ்வின் புகைப்படங்கள் நேற்று மாலை வெளியான பின்னரே இது குறித்து பொதுமக்களுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வசி ஒரு பிரபல டி.ஜே. (DJ) மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவன உரிமையாளர். பெரிய திருமணங்கள், பார்ட்டிகள், மற்றும் கிளப்புகளுக்கு டி.ஜே.யாக பாடல் நிகழ்ச்சிகளை நடத்துபவர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரியங்காவின் திருமண நிகழ்வில் பிக் பாஸ் பிரபலங்கள் நிரூப், அமீர், பாவனி, அன்ஷிதா, சுனிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
💍 Priyanka Ties the Knot!
— Kollywood Now (@kollywoodnow) April 17, 2025
Popular Vijay TV anchor #PriyankaDeshpande gets married to DJ Vasi Sachi 💐❤️ Wishing the lovely couple a lifetime of happiness and love! pic.twitter.com/n9pMNImcDL
விவரங்கள்
பிரியங்காவின் திருமணம் பற்றிய விவரங்கள்
முன்னதாக, பிரியங்கா விஜய் டிவியில் நுழைவதற்கு முன்னர், சன் டிவி, ஜீ தமிழ், சுட்டி டிவி, சன் மியூசிக் என்று பல டிவி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.
பின்னர் விஜய் டிவியில் பணியாற்றிய பிரவீன் குமார் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் எதிர்பார்த்தபடி அவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லவில்லை. இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
ஆனால் பொதுவெளியில் இது குறித்து எப்போதும் பிரியங்கா பேசுவதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், பிரியங்கா, வசியை மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துள்ளார்.
இருவருக்குள்ளும் காதல் ஏற்படவே தற்போது வசியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
அவரது திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.