அதிர்ந்தது கோலிவுட்! விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே திரிஷாவுடன் திருமண வரவேற்பிற்கு வந்த விஜய்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகிய இருவரும் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்துகொண்டது தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி எஸ். சுரேஷ் - மீனாட்சி சுரேஷ் தம்பதியினரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. 'பிகில்' மற்றும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT) போன்ற மெகா ஹிட் படங்களைத் தயாரித்த கல்பாத்தி குடும்பத்துடன் விஜய்க்கு நெருங்கிய நட்பு உண்டு. இந்த நிகழ்ச்சியில் விஜய் கையில் பூங்கொத்துடன் காரில் இருந்து இறங்க, அவருக்குப் பின்னால் அதே காரில் இருந்து நடிகை திரிஷா பட்டுச் சேலையில் இறங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
JUST IN: Thalapathy Vijay attended the wedding reception of Kalpathi S. Suresh and Meenakshi Suresh’s son earlier today.
— Actor Vijay Team (@ActorVijayTeam) March 5, 2026
pic.twitter.com/QiBXaj7QCX
வதந்தி
வதந்திகளுக்கு வலு சேர்க்கும் வருகை
இருவரும் ஒரே காரில் வந்து, Color-coordinated பாரம்பரிய உடையில் ஒன்றாக நுழைந்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருவரும் மிகவும் இயல்பாகச் சிரித்துப் பேசியபடி மண்டபத்திற்குள் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் 'டிரெண்டிங்' ஆகி வருகிறது. விஜய்யின் மனைவி சங்கீதா, கடந்த 2025 டிசம்பர் மாதம் செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத் தாக்கல் செய்ததாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்தத் தம்பதியினரின் பொது வருகை கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதாவின் மனுவில் விஜய்யின் 'தனிப்பட்ட உறவுகள்' குறித்த சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சூழலில், திரிஷாவுடன் அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.