LOADING...
'அரசன்' படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி: வைரலாகும் புதிய அப்டேட்
'அரசன்' படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி

'அரசன்' படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி: வைரலாகும் புதிய அப்டேட்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 31, 2026
01:08 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, தனது மாறுபட்ட நடிப்பாற்றலால் ரசிகர்களைத் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தில், அவர் மீண்டும் ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்துள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. விஜய் சேதுபதி இதற்கு முன்பு 'சேதுபதி', செக்கச்சிவந்த வானம்' மற்றும் 'டிஎஸ்பி' போன்ற திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும், 'அரசன்' திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர்

இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்

ஒரு நேர்மையான மற்றும் அதே சமயம் அதிரடி முடிவுகளை எடுக்கக்கூடிய காவல்துறை அதிகாரியாக அவர் இந்தப் படத்தில் வலம் வரவுள்ளார். படத்தின் திரைக்கதை சமூகத்தில் நிலவும் ஒரு முக்கியப் பிரச்சனையை மையமாகக் கொண்டு, விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டு வருகிறது. 'அரசன்' திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், இயக்குனருடன் அவரது மூன்றாவது படமாகும். முன்னதாக இந்த ஜோடி விடுதலை 1 மற்றும் 2 படங்களில் பணிபுறிந்துள்ளனர். படத்தின் கதாநாயகன் சிலம்பரசன் உடன் VJS-இன் இரண்டாவது படமாகும் இது!

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement