LOADING...
'அரசன்' படக்குழுவில் இணைந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
'அரசன்' திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் VJS

'அரசன்' படக்குழுவில் இணைந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 25, 2025
12:27 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் இணையும் புதிய படமான 'அரசன்' திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த மாபெரும் கூட்டணியின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது STR -VJS கூட்டணியில் இரண்டாவது படமாகும். முன்னதாக இருவரும் மணிரத்னம் இயக்கிய 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். அதேபோல், வெற்றிமாறன் உடன் இது விஜய் சேதுபதியின் மூன்றாவது படமாகும். முன்னதாக அவர்கள் இருவரும் 'விடுதலை பாகம் 1 மற்றும் 2' ஆகிய படங்களில் பணியாற்றியிருந்தனர். முன்னதாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படமான 'வடசென்னை'யில், 'ராஜன்' என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதிதான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post