
'லியோ' படத்தில், விஜய்யின் பகுதிகள் ஷூட்டிங் நிறைவு: லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
'லியோ' படம் ஏக எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது. நடிகர் விஜய், திரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
இப்படம், அக்டோபர் மாதம் இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இன்று நடிகர் விஜய்யின் பகுதிகளின் ஷூட்டிங் தற்போது நிறைவு பெற்றதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
இதற்கு பிறகு, பேட்ச் ஒர்க் ஷூட்டிங் மட்டும் ஒன்றிரண்டு நாட்கள், காஷ்மீரில் நடக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.
அது நிறைவுற்றதும், VFX பணிகளுக்காக லோகேஷ் கனகராஜ் அமெரிக்கா செல்லவுள்ளார் எனவும், விரைவில் படத்தின் ஆடியோ வெளியிடப்படும் எனவும் செய்திகள் கூறுகின்றன.
இதனிடையே, நடிகர் விஜய், நாளை தனது நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார் என பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
லோகேஷ் கனகராஜ் ட்வீட்
And it's a wrap for our @actorvijay portion! 🤜🤛
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 10, 2023
Thank you for making the second outing yet again a special one na! ❤️#Leo 🔥🧊 pic.twitter.com/t0lmM18CVt