நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' கிளிப்ஸ் இணையத்தில் லீக்; அதிர்ச்சியில் ரசிகர்கள்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் ஐந்து நிமிடக் காட்சிகள் இணையதளத்தில் கசிந்துள்ள செய்தி, சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, கசிந்த அந்த வீடியோவில் படத்தின் டைட்டில் கார்டுகள், விஜய்யின் மாஸ் அறிமுக காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எடிட்டிங் மேஜையிலிருந்து இந்த வீடியோ திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வீடியோவின் இறுதியில் ஒருவர் அதனை 'Pause' செய்வது போன்ற காட்சிகள் தெரிவதால், இது உள்வேலைகளால் நடந்திருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
நடவடிக்கை
தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரசிகர்கள் எடுத்த நடவடிக்கை
வீடியோ கசிந்த சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் அது காட்டுத்தீயாக பரவியது. இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள், தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை டேக் செய்து, வீடியோவைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். தற்போது எக்ஸ் (X) போன்ற தளங்களில் இருந்து அந்த வீடியோவை நீக்கும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது படத்திற்கு எதிராக செய்யப்படும் ஒரு சதித் திட்டம் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Shocked to see many scenes of #JanaNayagan being leaked online including introduction scene, climax scene etc. Now many are tweeting that full film is leaked, which is devastating.
— G Dhananjheyan (@Dhananjayang) April 9, 2026
This is outrageous and highly condemnable whoever is responsible for this. @KvnProductions must…
ரிலீஸ்
தணிக்கை குழுவும் ரிலீஸ் தாமதமும்
ஜனவரி 9-ஆம் தேதியே வெளியாக வேண்டிய 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கைக் குழுவின் (CBFC) கெடுபிடிகளால் தள்ளிப்போனது. படத்தின் சில காட்சிகள் பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு மறுத்துவிட்டது. தற்போது இந்தப் படம் மறுஆய்வுக் குழுவின் வசமுள்ளது. அக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், படத்தின் திரையிடல் மேலும் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது. விஜய் தனது தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சி மூலம் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால், தேர்தல் முடிந்த பிறகே இந்த படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரூ. 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.