லியோ காட்சிகள் ஆன்லைனில் வெளியானது- ரசிகர்கள் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்யும், ஹைனாவும் சண்டையிடும் காட்சிகள் ஆன்லைனில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பெரும் சர்ச்சைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு காலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்காததால், லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் 9 மணிக்கு திரையிடப்படுகிறது.
இருந்த போதும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் படம் முன்னரே வெளியானது.
இந்நிலையில் படத்தில் விஜய்யின் அறிமுக காட்சியில், அவரும், ஹைனாவும் சண்டையிடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது.
லியோ திரைப்படத்தில் கசிந்த காட்சிகள், காஷ்மீர் படப்பிடிப்பின் போது படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
லியோ திரைப்படத்தின் கசிந்த காட்சிகளை பரப்பினால், அவர்களது தனக்கு முடக்கப்படும் என ட்விட்டர் எச்சரிக்கை
🚨Restrain yourself from sharing the leaked video of #LEO.
— BLOCK X (@blockxtechs) October 18, 2023
Repeated infringing handles will be suspended without any notifications.
DM us such tweets @blockxtechs. We will bring them down!!