Netflix-இல் வெளியான விஜய்யின் 'GOAT' திரைப்படம், ஆனால்...வெங்கட் பிரபு சொன்ன தகவல்
விஜய்யின் சமீபத்திய வெளியீடான GOAT திரைப்படம் இன்று முதல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. GOAT, வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான ஒரு அறிவியல் புனைகதை ஆக்ஷன் த்ரில்லர். இது செப்டம்பர் 5, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் ப்ரோமஷன் பேட்டியின் போது, வெங்கட் பிரபு, சுமார் 20 நிமிட டைரக்டர்'ஸ் கேட் காட்சிகளைக் கொண்ட ஒரு எஸ்ட்டெண்டெட் வெர்ஷன், நெட்ஃபிலிக்ஸ் இல் வெளியிடப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது திரையரங்கில் வெளியான பாதிப்பே OTTயிலும் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் டெலீட்டட் சீன்ஸ்-க்கான VFX பணிகள் நிறைவடையாததால் அவற்றை வெளியிடவில்லை எனவும், தயாரிப்பாளர்களிடம் பேசி விரைவில் அவற்றை தனியாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.