Page Loader
கேரளாவில் எகிறும் விஜய் ஃபீவர்; வைரலாகும் வீடியோ
விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம்

கேரளாவில் எகிறும் விஜய் ஃபீவர்; வைரலாகும் வீடியோ

எழுதியவர் Venkatalakshmi V
Mar 20, 2024
08:36 am

செய்தி முன்னோட்டம்

'கோட்' பட ஷூட்டிங்கிற்காக தற்போது தளபதி விஜய் கேரளாவிற்கு சென்றுள்ளார். அவரை காண ஏர்போர்ட்டில் ரசிகர் கூட்டம் குவிந்திருந்த வீடியோ சமீபத்தில் வைரலாக பரவியது. இதில் விஜய்யின் கார் கண்ணாடி சேதமடைந்ததாகவும் செய்திகள் பரவின. இந்த நிலையில், கோட் படப்பிடிப்பை காணவும், விஜய்-ஐ காணவும் அங்கங்கே ரசிகர்கள் கூடி வருகின்றனர். விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். அவரது படங்களுக்கென அங்கே தனி மார்க்கெட் உண்டு. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து விஜய் கேரளாவிற்கு ஷூட்டிங் வந்துள்ளதால், அவரை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று இரவும் அவர் தங்கியிருந்த ஹோட்டல் வளாகத்தில் கூட்டம் கூடவே, விஜய் கேரவன் வாகனம் மீது ஏறி, ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டார்.

embed

விஜய் ஃபீவர்

Thalapathy 🤳🏿 pic.twitter.com/XBqDbbN4Fo— Christopher Kanagaraj (@Chrissuccess) March 19, 2024

embed

விஜய் ஃபீவர்

🔥🔥🔥 pic.twitter.com/6CJaxzAUg4— Christopher Kanagaraj (@Chrissuccess) March 19, 2024