லியோ ட்ரைலர் வரும் அக்டோபர் 5 வெளியாகும் என அறிவிப்பு
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், திரைக்கு வரத்தயாராக இருக்கும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்ற செப்டம்பர் 30 நடைபெறுவதாக இருந்தது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகத நிலையில், விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, விழாவை ரத்து செய்தது படக்குழு. விஜய் ரசிகர்கள் அதிக அழைப்பிதழ் எதிர்பார்ப்பதாகவும், அத்தனை பெரிய கூட்டத்தை சமாளிக்க அரங்கம் போதாத காரணத்தாலும், பாடல் வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த நிலையில், பாடல் வெளியீட்டு விழாவில் வெளியிடுவதாக இருந்த ட்ரைலர், வரும் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
லியோ ட்ரைலர்
The High Octane #LeoTrailerFromOct5 🔥#LeoFromOctober19#LEO 🔥🧊 pic.twitter.com/V1xub8pIM3— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 2, 2023