கோர்ட் கொடுத்த அதிரடித் தீர்ப்பு! சென்சார் சிக்கலில் இருந்து மீண்டது ஜனநாயகன்; ஆனால் ஒரு ட்விஸ்ட்!
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் தனது திரையுலகப் பயணத்தின் கடைசிப் படமாக அறிவித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட இழுபறிக்கு சென்னை உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தணிக்கை வாரியம் இந்தப் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியதை ரத்து செய்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு உடனடியாக U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளார். தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த அவசர வழக்கில் இந்த முக்கியத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, இது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
மேல்முறையீடு
தணிக்கை வாரியத்தின் மேல்முறையீடு
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் நகல் மற்றும் தணிக்கைச் சான்றிதழ் குறித்த அப்டேட்கள் வைரலாகி வருகின்றன. தணிக்கை வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஜனநாயகன் வழக்கில் நீதிபதி பி.டி.ஆஷாவின் உத்தரவுக்கு எதிரான ரிட் மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவாவிடம் முறையிட்டார். தலைமை நீதிபதி, இது குறித்து பரிசீலிப்பதாகக் கூறினார். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) மதியம் அல்லது திங்கட்கிழமை விசாரணைக்கு ஏற்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Hearing expected to take place either this afternoon or on Monday.
— Mohamed Imranullah S (@imranhindu) January 9, 2026
பொங்கல் ரிலீஸ்
பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகுமா?
தளபதி விஜயின் அரசியல் வருகைக்கு முந்தைய கடைசி திரைப்படம் என்பதால், உயர் நீதிமன்ற தீர்ப்பை ரசிகர்கள் ஒரு திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். எனினும், தணிக்கை வாரியம் மேல்முறையீட்டிற்கு செல்வதால், பட வெளியீடு தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம், விஜயின் அரசியல் வாழ்விற்கு ஒரு முன்னோட்டமாக அமையும் என்பதால், தணிக்கைச் சிக்கல்களைத் தாண்டி இந்தப் படம் பெறும் வெற்றி சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் உற்று நோக்கப்படுகிறது.