NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி வழங்கினார் விஜய்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி வழங்கினார் விஜய்
    நடிகர் சங்க கட்டிடம் கட்ட விஜய் ரூ.1 கோடி நிதி

    நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி வழங்கினார் விஜய்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 08, 2024
    07:44 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் சங்க கூட்டத்திற்குப் பிறகு பேசிய நடிகர் கார்த்தி, நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப் பணிக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி கொடுத்ததாக தெரிவித்தார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) நடிகர் சங்க கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க நடிகர் விஷால் சைக்கிளில் வந்தது பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

    நடிகர் சங்கத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் நிலையில், அதைத் தொய்வின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நிதி

    நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான நிதி

    நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கான நிதியை கடனாக பெற வங்கியில் 50% தொகையை வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டதால், அதை தயார் செய்வதற்கு நான்கு மாதம் ஆகிவிட்டதாக நடிகர் விஷால் தெரிவித்தார்.

    இந்நிலையில், நடிகர் விஜய் நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப் பணிக்காக ரூ.1 கோடி கொடுத்தார் என நடிகர் கார்த்தி கூறினார்.

    மேலும், நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், நெப்போலியன் மற்றும் நடிகராக இருந்து அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் நிதி கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.

    இதற்கிடையே, நடிகர் சங்க கட்டிடத்தின் கடனை அடைப்பதற்காக கலை நிகழ்ச்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதில் ரஜினி மற்றும் கமல் இணைந்து ஒரு டிராமா நிகழ்ச்சியில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் சங்கம்
    நடிகர் விஜய்
    கோலிவுட்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நடிகர் சங்கம்

    தனுஷ், SJ சூர்யா, அமலா பால் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு: விளக்கம் அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்  தனுஷ்
    நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினர்களுக்கு ஆதரவான நடவடிக்கை மேற்கொண்ட விஷால் விஷால்
    நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு  சிலம்பரசன்
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி

    நடிகர் விஜய்

    50வது படத்தில் வெற்றி கொடி நாட்டிய கோலிவுட் நடிகர்கள் கோலிவுட்
    ஸ்டைலிஷ் லுக்கில் விஜய்..அழகு பதுமையாக மீனாட்சி: GOAT 3வது பாடல் கிலிம்ப்ஸ் வெளியானது விஜய்
    'அண்ணே வரார் வழிவிடு': GOAT திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம் சினிமா
    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா எப்போது தெரியுமா? விஜய்

    கோலிவுட்

    வேட்டையன் பராக் பராக்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் புதிய அப்டேட் ரஜினிகாந்த்
    கொட்டுக்காளி, வாழைக்கு போட்டியாக ராயன், கல்கி 2898AD; இந்த வார ஓடிடி அப்டேட் ஓடிடி
    ராயன் பட வெற்றியால் நடிகர் தனுஷுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனுஷ்
    வாழை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது மாரி செல்வராஜ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025