LOADING...
விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம்! இணையத்தை கலக்கும் புதுமையான 'வெட்டிங் கிஃப்ட் பாக்ஸ்'
ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவரகொண்டா திருமணம் வரும் பிப்ரவரி 26 நடைபெறவுள்ளது

விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம்! இணையத்தை கலக்கும் புதுமையான 'வெட்டிங் கிஃப்ட் பாக்ஸ்'

எழுதியவர் Venkatalakshmi V
Feb 19, 2026
12:39 pm

செய்தி முன்னோட்டம்

நீண்ட காலமாகக் காதலித்து வந்த ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமணம் வரும் பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் மிக நெருக்கமான உறவினர்கள் மத்தியில் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அவர்களது திருமண அழைப்பிதழ் அடங்கிய Hamper சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமான திருமண பத்திரிகையாக இல்லாமல், இருவரின் தனிப்பட்ட ரசனைகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த 'கிஃப்ட் பாக்ஸ்' வடிவமைக்கப்பட்டுள்ளது:

விசேஷங்கள்

Gift Hamper-இல் உள்ள விசேஷங்கள்

வழக்கமான திருமணப் பத்திரிகையாக இல்லாமல், இருவரின் தனிப்பட்ட ரசனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த 'கிஃப்ட் பாக்ஸ்' வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகா சமீபத்தில் தொடங்கிய தனது சொந்த பிராண்டின் பெர்ஃப்யூம் இதில் இடம் பெற்றுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் 'Rowdy' பிராண்ட் டி-ஷர்ட் மற்றும் வாசனைத் திரவியங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கை மற்றும் கால் பராமரிப்பு கிரீம்கள், முந்திரி மற்றும் இனிப்புகள் அடங்கிய ஸ்வீட் பாக்ஸ்-உம் இதில் உள்ளது.

திருமணம்

திருமண ஏற்பாடுகள்

பிப்ரவரி 24 முதல் திருமண சடங்குகள் தொடங்கி, 26-ஆம் தேதி மிகத் தனிப்பட்ட முறையில் திருமணம் நடைபெறும். அங்கு மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, வரும் மார்ச் 4 அன்று ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்தை புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஊடக நண்பர்களுக்காக தனியாக மதிய விருந்து அளிக்க இந்த ஜோடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement