
விக்னேஷ் சிவன்- பிரதீப் ரங்கநாதன் இணையும் எல்ஐசி படம் பூஜையுடன் தொடங்கியது
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்க உள்ள LIC திரைப்படத்தின் பூஜை நேற்று நடந்தது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்தாண்டு ஜனவரி மாதம் அஜித்குமாருடன் ஏகே 62 என்ற படத்தை, லைகா தயாரிப்பில் அவர் இயக்குவதாக இருந்தது.
பல அறியப்படாத காரணங்களினால் இந்த படம் கைவிடப்படவே, தற்போது செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், 'லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து LIC என்ற படத்தை அவர் இயக்கவுள்ளார்.
இப்படத்தில் க்ரிதி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். மேலும், நயன்தாரா பிரதீப் ரங்கநாதனின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
LIC படத்திற்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கவுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
எல்ஐசி படம் பூஜை
After Kaathuvaakula Rendu Kaadhal, we’re thrilled to join hands with @VigneshShivN once again
— Seven Screen Studio (@7screenstudio) December 14, 2023
Very Happy to vibe with @anirudhofficial for the 4th time after giving a blockbuster Leo
We are Eager to team up with @pradeeponelife after his youthful blockbuster Love Today
Can’t… pic.twitter.com/SDVaLZhqiC