புதுச்சேரியில் ஹோட்டல் விலைக்கு வாங்க வந்தேனா? விக்னேஷ் சிவன் விளக்கம்
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இணையத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சார்ந்த மீம்களே வியாபித்திருந்தது. விக்னேஷ் சிவன், புதுச்சேரி அரசு ஹோட்டல் ஒன்றை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், அது குறித்து அனுமதி கேட்டு புதுச்சேரி முதல்வரை சந்திக்க வந்ததாகவும் கூறப்பட்டது. எனினும் முதல்வர் அந்த சமயம் இல்லாததால், புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்து சென்றதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் தற்போது விக்னேஷ் சிவன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, அவர் இயக்கிவரும் LIK படத்திற்காக லொகேஷன் பார்க்க சென்றதாகவும், மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்திக்க சென்றதாகவும், உடன் வந்தவர் தனிப்பட்ட தேவைக்காக அந்த ஹோட்டல் பற்றி விசாரித்தது, விக்னேஷ் சிவனுக்காக என தவறாக செய்திகள் வெளியானதாகவும் அவர் அந்த விளக்க அறிக்கையில் கூறியுள்ளார்.