
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 'துப்பாக்கி' நடிகர் வித்யுத் ஜம்வால்
செய்தி முன்னோட்டம்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் AR முருகதாஸ் உடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார்.
இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது என கூறப்பட்ட நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் வித்யுத் ஜம்வால் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் வித்யுத், முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கி திரைப்படம் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது நினைவிருக்கலாம்.
அதன் பின்னர் 'அஞ்சான்' திரைப்படத்தில் நடித்த அவர், நீண்டகாலத்திற்கு பிறகு தற்போது மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் திரையுலகத்திற்கு திரும்புகிறார்.
SK 23 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தினை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிக்கிறது.
embed
SK 23-இல் இணைந்த வித்யுத் ஜம்வால்
Bringing back the villain who terrorized one and all 🔥 Welcoming the menacing @VidyutJammwal on board for #SKxARM ❤️🔥 ▶️ https://t.co/57n8gxjemA Shoot in progress.@SriLakshmiMovie @ARMurugadoss @Siva_Kartikeyan @anirudhofficial @SudeepElamon @rukminitweets @KevinKumarrrr... pic.twitter.com/OWGQYfu03z— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) June 9, 2024