சமையல் கலைஞராக மாறிய தல அஜித்; வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
பொதுவாகவே ஏதேனும் இடைவேளை கிடைக்கும் போதெல்லாம், பைக் பயணத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகர் அஜித் குமார்.
அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு தள்ளி போனதை அடுத்து, தற்போது மீண்டும் பைக் பயணத்தை துவங்கி உள்ளார்.
அப்படி அவர் பைக் பயணத்திற்கு, தற்போது தேர்ந்தெடுத்துள்ள நாடு நேபாளம்.
அவர் நேபாளில் இருப்பதாக அவ்வப்போது புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது.
அதில், நேபாளத்தில் உள்ள ஒரு உணவகத்தில், சமையலறையில் இருக்கிறார் அஜித். அந்த வீடியோவில், ஒரு தேர்ந்த சமையல்காரரை போல, ஏப்ரான்(Apron) மற்றும் ஒரு சமையல்காரர் தொப்பியை அணிந்திருந்தார்.
அதோடு, அந்த உணவகத்தில் அவர் உணவை சமைத்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
செஃப் அஜித்குமார்
Recent Ajith Kumar sir cooking Nepal hotel🤩🔥#RIDEformutualrespect #AjithKumar #Ak62 #Thala
— Ajithkumar_Samrajyam (@Ak_Samrajyam) April 24, 2023
More exclusive video only on Ajithkumar_samrajyam follow now ❤️ pic.twitter.com/Sk3gyodxip