Page Loader
வீடியோ: யுவன் சங்கர் ராஜாவிடம் தமிழ் பாடலை பாடி அசத்திய சீன ரசிகர்
'துளி துளி துளி' பாடலை பாடி அசத்திய சீன ரசிகர்

வீடியோ: யுவன் சங்கர் ராஜாவிடம் தமிழ் பாடலை பாடி அசத்திய சீன ரசிகர்

எழுதியவர் Sindhuja SM
Oct 23, 2023
01:22 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்ற செய்தி சில வாரங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சமீபத்தில், விருமன், நானே வருவேன், 1945, காபி வித் காதல், ஏஜென்ட் கண்ணாயிரம், லத்தி, கஸ்டடி மற்றும் லவ் டுடே போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்திருந்தார். இதில், லவ் டுடே திரைப்படத்தின் பாடல்கள் வைரலாகி அவருக்கு மேலும் பெருமையை தேடி தந்தது. இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவிடம் சீனாவை சேர்ந்த ஒரு ரசிகர் 'துளி துளி துளி' பாடலை பாடி அசத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது .

ட்விட்டர் அஞ்சல்

யுவன் சங்கர் ராஜாவிடம் பாடி அசத்திய சீன ரசிகர்