NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வெற்றிமாறனின் விடுதலை 2 டப்பிங் பணி தொடங்கியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெற்றிமாறனின் விடுதலை 2 டப்பிங் பணி தொடங்கியது
    'விடுதலை 2' டிசம்பர் மாதம் திரைக்கு வரும்

    வெற்றிமாறனின் விடுதலை 2 டப்பிங் பணி தொடங்கியது

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 10, 2024
    06:33 pm

    செய்தி முன்னோட்டம்

    வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை 2' படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

    'விடுதலை 2' டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    'விடுதலை' படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வெளியானது.

    இதில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இவர்களோடு பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்,

    இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

    வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    விடுதலை 2

    தாமதமான விடுதலை 2 பணிகள்

    முதல் பாகம் வெளியான ஓரிரு மாதங்களிலேயே இரண்டாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ஷூட்டிங் பணிகள் நீண்டு கொண்டே இருந்தது.

    இந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது.

    இப்போது, 'விடுதலை 2'-ன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இரண்டாம் பக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

    2-ஆம் பாகத்தில், விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரத்துக்கான பின்புலத்தை வெற்றிமாறன் முழுமையாக காட்சிப்படுத்தியுள்ளார்.

    டிசம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விடுதலை
    வெற்றிமாறன்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    விடுதலை

    விடுதலை 1 & 2 படத்திற்காக ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் வெற்றிமாறனுக்கு கிடைத்த மரியாதை  வெற்றிமாறன்
    தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் மு.க.அழகிரி விடுதலை: நீதிமன்றம் உத்தரவு மு.க.அழகிரி
    உளவு பார்த்த விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே குற்றத்தை ஒப்புக்கொண்டார்; விரைவில் விடுதலை ஜூலியன் அசாஞ்சே
    'விடுதலை -3' வெளியாகிறதா? சாத்தியம் என்கிறார் வெற்றிமாறன் வெற்றிமாறன்

    வெற்றிமாறன்

    மீண்டும் தாமதமாகும் சூர்யா திரைப்படம்- வெற்றிமாறனின் 'வாடிவாசல்' திரைப்பட அறிவிப்பு
    "பள்ளி கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும் ": இயக்குனர் வெற்றிமாறன் கருத்து கோலிவுட்
    தனுஷ்- ஜூனியர் என்டிஆரை இயக்கப்போகும் வெற்றிமாறன்; இரண்டு பாகமாக எடுக்கப்போவதாக செய்தி தனுஷ்
    'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ இளையராஜா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025