அடுத்த செய்திக் கட்டுரை

பிரபல பின்னணி பாடகி 'பத்ம பூஷன்' வாணி ஜெயராம் காலமானார்
எழுதியவர்
Venkatalakshmi V
Feb 04, 2023
04:11 pm
செய்தி முன்னோட்டம்
பழம்பெரும் பாடகியான வாணி ஜெயராம், சென்னையின் இன்று (பிப்.,4) காலமானார். அவருக்கு வயது 78 .
சமீபத்தில், இசைத்துறையில் அவரின் பங்களிப்பிற்காக இந்திய அரசின் 'பத்ம பூஷன்' விருதை பெற்றார்.
வாணி ஜெயராம், சென்னை, ஹாடோஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ள வாணி ஜெயராம், சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை மூன்று முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், இந்திய சினிமா துறையில் 50 ஆண்டு கால பயணத்தை நிறைவு செய்த வாணி ஜெயராமின் திடீர் மறைவு, இசைத்துறையில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பாடகி வாணி ஜெயராம்
#BREAKING | பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானார்#singer #vanijayaram | #ThanthiTV pic.twitter.com/QfUKr3cXah
— Thanthi TV (@ThanthiTV) February 4, 2023