
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
செய்தி முன்னோட்டம்
இசையமைப்பாளர் ஜோடி சபேஷ்- முரளியில் ஒருவரும் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் 'தேனிசை தென்றல்' தேவாவின் இளைய சகோதரருமான சபேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தேவாவிடம் உதவி இசையமைப்பாளராக தனது திரை பயணத்தை துவங்கிய சபேஷ், மற்றொரு சகோதரர் முரளியுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனித்தும் இவர் சமுத்திரம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் மகன் கார்த்திக் சபேஷ் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். இவரின் சகோதரி மகன் தான் நடிகர் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் திடீர் மறைவிற்கு நடிகர்களும், இசை துறையில் இருப்பவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
மறைந்தார் இசையமைப்பாளர் சபேஷ்!#SunNews | #RIPSabesh | #Sabesh pic.twitter.com/DUAyP0lC7a
— Sun News (@sunnewstamil) October 23, 2025